/* */

சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா

சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா
X

சோழவந்தான் சிவன் கோவிலில் குருவார பிரதோஷ விழாவையொட்டி சுவாமி வீதி உலா நடைபெற்றது.

சோழவந்தான் சிவன் கோவிலில் தை மாதம் குருவார பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளது பிரளய நாதர் சுவாமி சிவன் கோவில். அங்கு ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் குருவார பிரதோஷ விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் குருவார பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர லிங்கத்திற்கும் மற்றும் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமஹ சிவாய நமஸ்ரீ என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பி.ஜே.பி. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம். வி. எம். குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம். வி. எம். தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Jan 2023 7:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  2. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  3. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  6. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  7. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?