திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை .
காஞ்சிபுரம் திருக்காளிமேடு அல்லாபாத் ஏரியில் உலாவரும் மான்கள் கூட்டம்
கோயில் நகரம், ஏரிகள் மாவட்டம் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி . சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நீண்ட நெடிய ஏரி பொதுமக்களுக்கு எந்தவித பயணம் அளிக்காத நிலையில் அடர்ந்த காட்டு வனம் போல் இந்த பகுதி அமைந்துள்ளது.
பிரதான சாலையை ஓட்டி நகரை இணைக்கும் வகையில் இந்த ஏரிக்கரை பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஒரு மான் ஜோடி இந்த காட்டுக்குள் வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அதில் இனப்பெருக்கத்தின் பேரில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட மான்களுக்கு இருகின்றன. அவை அவ்வப்போது அது சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் இரைக்காக ஏரி காட்டுப்பகுதியில் இருந்து வெளிவருவகின்றன. அதனை காணும் மக்கள் அதனை புகைப்படம் எடுத்தல் மற்றும் பார்வையிட கூடுவதால் அது அச்சத்தில் மீண்டும் அந்த ஏரி காட்டுப்பகுதிக்குள் சென்று விடுகிறது.
ஏரி கரையை ஒட்டி உள்ளதாலும், அதனை ஒட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ளதும் வனவிலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், அதை ஏதேனும் தீங்கு நோக்குடன் செயல்படும் சமூக விரோதிகளின் செயல்களும் வன விலங்கு ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை மான் கூட்டம் ஒன்று அப்பகுதியில் இரைக்காக வெளியே வந்த நிலையில் அதனைக் கண்ட அப்பகுதி சமூக ஆர்வலர்கள் உடனடியாக அதனை காட்டுப்பகுதியில் இருக்கு விரட்டி விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் அதனை பிடித்து சரணாலயத்தில் ஒப்படைக்கவும் கோரிக்கையை வைத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu