/* */

மதுரை கருப்பாயூரணியில் போக்குவரத்து நெரிசல்: சிக்கி தவிக்கும் மக்கள்

மதுரை அருகே கருப்பாயூரணியில் சாலையின் இருபுறமும் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையற்ற முறையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

HIGHLIGHTS

மதுரை கருப்பாயூரணியில் போக்குவரத்து நெரிசல்:  சிக்கி தவிக்கும் மக்கள்
X

மதுரை அருகே கருப்பாயூரணி சாலையில் ஆக்கிரமித்து நிற்கும்  ஆட்டோக்கள்.

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் அமைந்துள்ளது, கருப்பாயூரணி. இந்தப் பகுதி வழியாக பல்வேறு தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. இங்கு சாலையின் இரு பக்கங்களிலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும், ஆங்காங்கே சாலையோர கடைகள் மிகுந்து காணப்படுவதாலும், முறையற்ற முறையில் இருசக்கர வாகனம், கார்கள், டிரை சைக்கிள்கள் நிறுத்தப்படுவதாலும், தினசரி போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி வாடிக்கையாகி விட்டது

கருப்பாயூரணியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அவ்வழியாக ஒத்தப்ப்பட்டி ,பூவந்தி, சிவகங்கை ராசாக்கூர் களிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளும், அவ்வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்களும் போக்குவரத்து சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

அப்பகுதிகளில் இரு சக்கர வாகனத்தை பாய்ந்து பிடிக்கும் போலீசார், கருப்பாயூரணியில் சாலையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள், ஆட்டோக்களை, அகற்றுவதற்கு ஏன் ஆர்வம் காட்டவில்லையென, என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ,இப்பகுதியில் கடைகளுக்கு செல்வோர், சாலையின் ஓரமாகவே வாகனங்களை நிறுத்தாமல், அவர்கள் செல்லும் கடைகளுக்கு முன்பாகவே , இரு சக்கர வாகன நிறுத்தி விடுகின்றனர். இதனாலும், பள்ளிக்கு செல்வோரும், கடைகளுக்கு செல்வோம் அவதி உற்று வருகின்றனர். இதுகுறித்து ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிக் கவனம் செலுத்தி கருப்பாயூரணியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கருப்பாயூரணி அப்பர் பள்ளி அருகே தினசரி காலை நேரங்களில், சாலையின் நடுவே, ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இயக்குவதால், சாலையின் நடுவே வாகனங்கள் தேங்கி நிற்கும் சூழல் ஏற்படுகிறது.

மதுரை நகரில், அண்ணாநகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், புதூர், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில், போக்குவரத்து காவல்துறையினர் முன்பாகவே, பேருந்து நிறுத்தங்களில், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகள், பேருந்துகள் செல்லமுடியாதபடி, ஆட்டோ ஓட்டுநர்கள் இடையூறுகள் செய்வதாக பெண்கள் பலர் புலம்புகின்றனர்.

மதுரை மாவட்டத்தில், சாலை விதிகளை மதிக்காத ஆட்டோ ஓட்டுநர்களை கட்டுப்படுத்த, போலீஸாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 March 2023 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  4. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  7. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  8. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  9. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  10. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...