/* */

இடுகாடு வசதி கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

இடுகாடு வசதி கேட்டு இஸ்லாமிய பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

HIGHLIGHTS

இடுகாடு வசதி கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புதுமோட்டூரைச் சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், கூறப்பட்டுள்ளதாவது:

புதுமோட்டூர், செட்டியூர், பனங்காட்டூர், பந்தாரவள்ளி, முதுகாம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு அடிப்படை தேவையான இடுகாடு இல்லாத காரணத்தால், 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூருக்கு நடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.

ஆனாலும், அந்த கிராமத்திலும் ஒருசில நேரங்களில் அடக்கம் செய்ய மறுக்கின்றனர். எனவே, புதுமோட்டூரில் பெரும்பாலான குடும்பங்கள் வசித்து வரும் சூழலில், இங்கு இடுகாடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Jun 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?