/* */

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2.12 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2.12 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2.12 லட்சம் பறிமுதல்
X

கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலரான நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பரசன் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்திருந்தனர்.

அப்போது ஜகன் என்பவர் பெங்களூர் சாலையில் இருந்து பழையபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது காரை நிறுத்தி பறக்கும்படையினர் சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 200 வைத்திருந்தது தெரிந்தது.

இதே போல் பெங்களூரில் இருந்து நாமக்கலை நோக்கி காரில் சென்ற கொண்டிருந்தவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.59 ஆயிரத்து 500ஐயும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 700ஐ, கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரான கற்பகவள்ளி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 30 March 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!