/* */

தைரியமாக பிரச்னைகளை கூறுங்கள்: மாணவிகளுக்கு ஆட்சியர் தன்னம்பிக்கை

நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணர்வு தன்னம்பிக்கை நிகழ்ச்சி கரூரில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தைரியமாக பிரச்னைகளை கூறுங்கள்: மாணவிகளுக்கு ஆட்சியர் தன்னம்பிக்கை
X

நிமிர்ந்து நில், துணிந்து சொல் மாணவிகளுக்கானபாலியல் விழிப்புணர்வு, தன்னம்ப்பிக்கையூட்டும் நிகழ்ச்சியில் பேசுகிறார் ஆட்சியர் பிரபு சங்கர் 

கரூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் "நிமிர்ந்து நில் துணிந்து சொல்" பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று காந்திகிராமம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கலந்து கொண்டு மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் சம்பந்தமாக நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நமது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாத போது மருத்துவர் தவிர வேறு யாரையும் நம்மை தொட்டுப் பேச விட கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும். நாம் அச்சப்படவோ குழப்பமடைய கூடாது.

உங்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் அதை உடனடியாக குழந்தை பாதுகாப்பு தொடர்பான தொலைபேசி எண் 1098, கல்வி வழிகாட்டி தொடர்பான தொலைபேசி எண் 14417, மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 8903331098 ஆகிய மூன்று தொலைபேசி எண்களில் தகவல் தெரிவியுங்கள்.

அவ்வாறு தகவல் தெரிவிக்கும் போது தகவல் தெரிவித்த மாணவியின் தகவல் ரகசியம் காக்கப்படும். அதோடு புகார் தெரிவித்த நபர் மீது உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் நீங்கள் தைரியமாக இருங்கள் நிமிர்ந்து நில்லுங்கள், துணிந்து சொல்லுங்கள், பாலியல் தொந்தரவு அல்லது வேறு வகையான தொந்தரவுகளை தீர்க்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!