/* */

கரூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்

HIGHLIGHTS

கரூரில்  தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி
X

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. 

கரூர் மாவட்டத்தில் ஐடி பார்க் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு.

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முகாமினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் ஐம்பது இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும் முகாமில் எட்டாம் வகுப்பு முதல் அனைத்து உயர் படிப்புகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பங்குபெறும் இம்முகாமில், 100 நிறுவனங்களில் உள்ள 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, அரசு போட்டித் தேர்வுக்கு அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பம் வழங்குதல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு அரங்கம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்முகாமில் இடம்பெற்றுள்ளன.

இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் வேலையின்மையை உருவாக்கும் நோக்கோடு முதல்வரின் முயற்சியால் பல்வேறு நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கரூர் மாவட்டத்தில் புதிய ஐடி பார்க் அமைப்பதற்கான வேண்டுகோள் முதல்வரிடத்தில் வைக்கப்படும். இதன் மூலமாக கரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

ஜவுளி நகரமான கரூரில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நடைபெறுகிறது.. 2030ம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடியாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்.

Made in china என்பதை, Made in india என்று கூறினோம். Made in Tamilnadu என்று மாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். Made in Karur என்று உலகம் முழுவதும் பேசும் அளவுக்கு. கரூர் ஜவுளி தயாரிப்புகள் உலத்தரத்தில் இடம்பெற வேண்டும் என்று பேசினார்.

Updated On: 19 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...