/* */

10 ஆண்டு குடிநீர் திட்டம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

கரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை தயார் செய்யும்படி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

10 ஆண்டு குடிநீர் திட்டம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
X

கரூரில்இன்று நடைபெற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசுகிறார் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு தடையில்லாத குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாள்களுக்கு ஒரு முறை தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை செம்மையாக செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 July 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!