/* */

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக ஆட்சியர் தங்கவேல் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஆட்சியர் அறிவிப்பு
X

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 பொங்கல் பரிசும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் பெறுவதற்காக ஜனவரி 7 மற்றும் 8 , 9ஆகிய தேதிகளில் நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டர் ஆட்சித் தலைவர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் விடுபடாமல் வழங்கிடவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. தற்போது ஒன்றிய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர். பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதார்ர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து,ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1.000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) ரொக்கப்பணம் வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10.01.2024 அன்று தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சுரூர் மாவட்டத்தில் 10.01.2024 முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தெரு வாரியாக சுழற்சி முறையில் Staggering System நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பரிசு தொகுப்பு வழங்குவதற்கு முன்னதாகவே அனைத்து குடுப்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் 07.01.2024 முதல் 09.01.2024 வரை வழங்கப்பட உள்ளது.

அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுச்செல்லுமாறும். இப்பணி குறித்த புகார்கள் ஏதுமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1077 மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 04324-257510 ஆகிய எண்களிலும், அந்தந்த நியாய விலை அங்காடிகளின் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ள அலுவலர்களின் தொலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 7 Jan 2024 3:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’