/* */

நெருங்கும் மழை காலம்: வாய்க்கால்கள் தூர் வாரும் பணி தீவிரம்

கரூர் நகராட்சியில் மழை காலத்தையொட்டி இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட வடிகால்களை தூர்வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மழைக் காலத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் மாபெரும் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி ராஜவாய்க்கால், இரட்டை வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் உள்ளிட்டவை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹிட்டாச்சி, ஜேசிபி உள்ளிட்ட ராட்சத இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வடிகால் தூர்வாரும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். 8 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் கணக்கிடப்பட்டு 6 நாட்களில் 48 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணி முடிவடைய உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 22 Sep 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  3. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  10. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!