/* */

2வது மெகா தடுப்பூசி முகாம்: கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 2வது மெகா தடுப்பூசி முகாமில் 1,00.036 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

2வது மெகா தடுப்பூசி முகாம்: கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி
X

கரூரில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வீடு..வீடாக சென்று மக்களை அழைக்கும் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தவறாமல் செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 12ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் முதற்கட்டாக நடத்தப்பட்டது. இம்முகாமில் அறிவித்த இலக்கை காட்டிலும் 61,724 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 9,03,245 நபர்கள், இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டோர் 4,90.693 நபர்கள் . இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 1,06,543 நபர்கள், 4.12.552 நபர்களுக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியிருந்தது.

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் . இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் தற்போது 2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது.

இந்த முகாம் மூலம் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கடு மொத்தம் 624 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 3,744 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் தொகுதியில் 96 இடங்களிலும் , கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 196 இடங்களிலும் , குளித்தலை தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என 624 முகாம்களில் இரண்டாவது முறையாக மாபெரும் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இவை தவிர, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கடவூர் பகுதியில் தனியாக களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி மக்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த வைத்தார்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த மெகா முகாமில் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொரோனா வைரஸ் பரவலைப் கட்டுப்படுத்த நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 1,00,036 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 81,575 மேலும், 2 வது டோஸ் தடுப்பூசியை 18,461 பேர் செலுத்திக் கொண்டனர்.

Updated On: 19 Sep 2021 5:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!