/* */

கரூர் மாவட்டத்தில் 1,477 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி: பயத்தில் மாணவிகள் கண்ணீர்

கரூர் மாவட்டத்தில் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத 1,447 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் 1,477 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி: பயத்தில் மாணவிகள் கண்ணீர்
X

கரூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்.

மருத்துவம் இளநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. கரூரில் 2 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வுக்காக 1,477 தேர்வர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பிற்பகல், 1.30 வரை தேர்வு எழுதும் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்வு எழுதும் மாணவர்கள் பிற்பகல் 12.30 முதலே நீண்ட வரிசையில் நின்றவாறு, நுழைவுத் தேர்வு அனுமதி சீட்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர். குடிநீர் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கரூரில் உள்ள இரண்டு மையங்களில், ஒன்றில் நீண்ட வரிசையில் தேர்வு எழுத வந்தவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அப்போது வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து அவர்கள் சிறிது நேரம் மர நிழலில் நிற்க வைத்ததால் உடல் வெப்பநிலை குறைந்தது. இதையடுத்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு எழுத வந்த மாணவிகளில் சிலர் தேர்வு அச்சத்தில் அழுதனர். அப்போது பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Updated On: 12 Sep 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...