/* */

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் வார்டு அமைக்க தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் வார்டு அமைக்க தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கோரிக்கை
X

கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், லீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா தாக்கத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆபத்து நேரத்தில் மக்களை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

இதற்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துமனையில் பொதுமக்களின் நலன் கருதி கொரோனா வார்டினை காலதாமதமின்றி உடனடியாக அமைத்து மக்களின் துயர் களைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு உரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 22 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்