/* */

குமரி: சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

குமரியில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமரி: சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
X

குமரி ஆரல்வாய்மொழி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் 45 வயதான குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் வள்ளியூரில் உள்ள உறவினர்களை பார்த்துவிட்டு நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். இருசக்கர வாகணமானது காவல்கிணறு- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் முப்பந்தல் அருகே வரும்போது திடீரென்று பயங்கர சத்ததுடன் மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்ததாக தெரிகிறது.

மேலும் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் கரும் புகையிடன் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர், தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Feb 2022 2:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!