/* */

கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம் பி. ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம் பி. ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம் பி. ஆய்வு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் நான்குவழிச்சாலை திட்டப்பணிகளை விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.

அப்போது விஜய் வசந்த் எம்பி கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது. நான் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பின் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்ஆகியோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது.இந்த பணிகளுக்காக கூடுதலாக 1041 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.கடுமையான முயற்சிகளின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 25 பெரியபாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பணிக்கான திட்ட இயக்குனர் வேல்ராஜ், இந்தபணிக்கான ஒப்பந்தக்காரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்தப் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரிமாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுப்பதற்கான அனுமதியை பெற்று தரப்பட்டது. ஆனால் வெளி மாவட்டத்தில் இருந்து இந்தபணிகளுக்காக மண் கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிரமங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.

Updated On: 22 Nov 2023 5:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?