/* */

நீண்ட நாட்களுக்குப் பின் குமரியில் அனுமதி; சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கடற்கரை, குதிரை சவாரி, சொகுசு கப்பல் பயணம் என கன்னியாகுமரிக்கு வந்த பொதுமக்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

HIGHLIGHTS

நீண்ட நாட்களுக்குப் பின் குமரியில் அனுமதி;  சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்
X

கன்னியாகுமரியில் சுற்றுலாத்தலங்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்கு முகம் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் கடந்த வருடம் மே 10 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

இந்நிலையில் தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று முதல் கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைகள், சூரிய உதய காட்சிகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர், மேலும் குதிரை சவாரி செய்தும் குடும்பத்தினருடன் இயற்கை அழகை ரசித்தனர்.

இதனிடையே கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரிதும் விரும்பும் கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்தும் இன்று தொடங்கியதால் சொகுசு படகில் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 23 Aug 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!