/* */

குமரியில் கவிமணி 67 வது நினைவு நாள்: ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

கவிமணியின் 67 ஆவது நினைவு நாளை முன்னிட்டு குமரியில் அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

குமரியில் கவிமணி 67 வது நினைவு நாள்: ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
X

சுசீந்திரத்தில் அமைந்துள்ள கவிமணி திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் கிராமத்தில் கடந்த 1857 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி பிறந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய கவிமணியின் புகழை பறைசாற்றும் வகையில் அப்பள்ளிக்கு கவிமணி பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் பற்றும் கொண்டிருந்த அவர் பல்வேறு கவிதைகளை இயக்கியுள்ளார், குழந்தைகளுக்காக சிறப்பு கவிதைகள், பாடல்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட கவிதைகளையும் இயற்றியுள்ளார்.

இவரது கைவீசம்மா கைவீசு குழந்தை பாடல் இன்றளவும் பாடப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சிறப்புகளை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கடந்த 1954 செப்டம்பர் 26ம் தேதி இயற்கை எய்தினார்.

அவரது 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On: 26 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!