/* */

பணிகள் முடியாமல் திறக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்ற அமைச்சர் உத்தரவு

யாத்ரி நிவாஸ் பணிகள் நிறைவு பெறாமல் திறக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

HIGHLIGHTS

பணிகள்  முடியாமல் திறக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்ற அமைச்சர் உத்தரவு
X

காஞ்சிபுரம் வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு.

புத்தாண்டு அன்று வழக்கம்போல் 12மணிக்கு சிறப்பு தரிசனத்திற்கு கோயில்கள் திறக்கப்படும் எனவும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் , உலகளந்த பெருமாள் கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருபத்திநாலு கோடி மதிப்பில் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அவசர கோலத்தில் பணிகள் முடிக்கப்படாமல் திறக்கப்பட்டதாகவும், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இந்த விடுதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார். பணிகள் முடியாமல் திறக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்றவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் வருகிற புத்தாண்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு வழக்கம்போல் புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்கு கோயில்கள் திறக்கப்படும் எனவும் பொதுமக்கள் அன்று நாள் முழுவதும் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். திமுக அரசு எப்போதும் ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டதாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 30 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு