/* */

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள் தீவிரம்

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி கரை அருகே அமைந்துள்ள அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள் தீவிரம்
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அறை.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வளாகம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் மூன்று தினங்களில் நடைபெற உள்ள நிலையில் , அதற்கான தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் 1932 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்ற பார்வை இயந்திரம் என பொருத்தப்படவுள்ளது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடும் ஒரு நிலையில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றபின் 6 சட்டமன்றத் தொகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஆறு தனி காப்பறையில் வைக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் கடந்த 10 தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு வரவேற்பு பகுதிகள் வழியாக வைக்கப்படும் வகையில் தனிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் 300 கேமரா பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு அறையிலும் 12 மேஜைகள் போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளான மின்விசிறி , எல் இ டி விளக்குகள், கழிவறை , குடிநீர் உள்ளட்டிவைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீ விபத்தை தடுக்கும் வகையில் அலாரம் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அறைகளில் சுற்றிலும் தடுப்புகளால் வேலி அமைக்கப்பட்டு முகவர்கள் பார்க்கும் வகையில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக வைக்கும் வகையில், ஸ்டிக்கர் ஓட்டும் பனியும் நடைபெற்று வருகிறது.

Updated On: 16 April 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
  9. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு