/* */

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு...!

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் மத்திய ராணுவ பாதுகாப்புடன் அறைக்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி சீல் வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு...!
X

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைத்த மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்புக்கல்லூரியில் பாதுகாப்பு அறைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் தேர்தல் அலுவலர் கலைச்செல்வி சீல் வைத்தார்.இதனை தொடர்ந்து மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

18 ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவுற்ற நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 1932 வாக்கு சாவடிகளில் இருந்து பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து நேற்று வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின் காஞ்சிபுரம் அண்ணா உறுப்புக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.


காலை எட்டு மணி வரை பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆறு சட்டமன்ற தொகுதியிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி, காவல்துறை பாதுகாப்பு தேர்தல் பார்வையாளர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட அறைகள் முன்பு மத்திய துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதும் சூழற்சி முறையில் காவல் துறையினரும் அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட உள்ளனர்.

Updated On: 20 April 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...