/* */

காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழியுடன் வைகுந்த பெருமாள் பல்லக்கில் வீதியுலா

Vaikunta Perumal Temple Kanchipuram - காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழியுடன்வண்ண மலர் அலங்காரத்துடன் பல்லக்கில் வைகுந்த பெருமாள் வீதியுலா வந்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழியுடன் வைகுந்த பெருமாள் பல்லக்கில் வீதியுலா
X

எட்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் ஆல் மேல் பல்லக்கில் வெண்ணொய் தாழியுடன் வீதியுலா வந்தார்.

VaikuntaPerumal Temple Kanchipuram- கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ்பெற்ற திருக்கோயில் அருள்மிகு கமலவல்லி ஸமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீ பரமேச்சுவர விண்ணகரம் எனவும் அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 26 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் 28ஆம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும் நேற்று தேர்த்திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாள்தோறும் காலை , மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அவ்வகையில் இன்று எட்டாம் நாள் காலை வைகுந்தப்பெருமாள் வெண்ணைத்தாழியுடன் வண்ண மலர் அலங்காரத்துடன் தன் அழகை எதிரே உள்ள நிலை கண்ணாடியில் ரசித்தவாறு பல்லக்கில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி எம்பெருமானை வழிபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Jun 2022 6:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு