/* */

650 வது நாள் : ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கடந்த 650 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

650 வது நாள் :  ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.
X

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 650 ஆவது நாள் போராட்டத்தில் பட்டை நாமம் போட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 4, 800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்து அதற்கான பணிகளை துவக்கி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்கு ஆரம்ப நாள் முதலே ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் மாலை வேலைகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று 650 ஆவது நாளை ஓட்டி கிராமத்தில் உள்ள அம்மன் திருக்கோயில் அருகே பட்டை நாமம் போட்டுக் கொண்டு மத்திய மாநில அரசுகளின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்தை கைவிடக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்த நிலையில் தேர்தல் விதிமுறையில் இருந்ததால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போராட்டங்கள் மீண்டும் நாள்தோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் , வருவாய்த்துறை தங்கள் கிராம உரிமையாளர்கள் பெயர்களை தவறாக பதிந்து வருவதாகவும் இதற்கு ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் துணை போவதாகவும் , இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுத்தி பயனடையலாம் என எண்ணும் அரசு அதிகாரிகளின் போக்கு ஒரு போதும் இந்த கிராமத்தில் எடுபடாது என தெரிவித்தனர்.

Updated On: 5 May 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்