/* */

காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் திருக்குளம் சீரமைப்பு பணி

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் திருக்குளம் தொல்லியல் துறை சார்பாக புனரமைக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் திருக்குளம் சீரமைப்பு பணி
X

சீரமைப்பு பணிகள் நடைபெறும் பெருமாள் கோவில் குளம்.

காஞ்சிபுரம் நகரில் பல்வேறு சைவ வைணவ தலங்கள் அமைந்துள்ளது. கனத்த மழை பெய்யும் காலங்களில் இக் குளங்கள் நிரம்பி வழிந்து பக்தர்களுக்கு வழிபாட்டிற்கும் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பரில் பெய்த கன மழையில் கூட வைகுண்ட பெருமாள் திருக்குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கோவில் வெளியில் குளம் உள்ளது.

தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவில் குளம் சுற்றுச்சுவர் படிக்கற்கள் பெயர்ந்து இருந்தன.அவற்றை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோவில்கள் அனைத்திலும் குளங்கள் உள்ளன. அந்தந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டிருந்தன.

நகர் பகுதி விரிவாக்கத்தின் போது கோவில் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. அதில், வைகுண்ட பெருமாள் கோவில் குளமும் ஒன்று. இருந்தாலும் கோவில் குளத்தில் உள்ள படிக்கட்டுகள் சில இடங்களில் பெயர்ந்து இருந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Updated On: 21 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  2. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  4. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  5. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  6. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  7. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  8. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  9. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!