/* */

ஆட்சியர், எஸ்.பி.,க்கு அறிவுரை வழங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

போதை பொருட்கள் கட்டுப்படுத்த வேண்டும் என மாணவன் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் மற்றும் எஸ்.பி.,க்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

HIGHLIGHTS

ஆட்சியர், எஸ்.பி.,க்கு அறிவுரை வழங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
X

காஞ்சிபுரம் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவர்களுடன் உரையாடிய போது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆட்சியருக்கு அறிவுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ள அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் வருகை புரிந்தனர்.

திருக்கோயிலுக்கு வந்திருந்த அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இந்திய தொல்லியல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்ட பின் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் வித்யாவதி மற்றும் மண்டல இயக்குனர் மகேஸ்வரி விளக்கம் அளித்தனர்.

இதன் பின் கோயில் வளாகத்தின் வெளியே நடைபெற்ற மாணவர்கள் உடனான கலந்துரையாடலில் பேசிய நிர்மலா சீதாராமன் திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் அதில் வரலாறுகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதன்பின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த மாணவன் யுவராஜ் , சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் மேல் கல்வி கற்க மிகவும் கடினமாக இருப்பதாகவும், வாகன எண்ணிக்கையில் அதிகம் காரணமாக ஆபத்தான நிலையில் பயணிப்பதாகவும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தங்களது விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சி மைதானம் செல்லுகையில் அங்கு போதை ஆசாமிகள் போதை பொருட்களையும் பாட்டில்களையும் வீசி விட்டு செல்வதால் பயிற்சி செய்வது மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்தார்.

இதைக் கேட்ட மத்திய அமைச்சர் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அழைத்து இது முக்கியமான பிரச்சனை எனவே இதற்கான விளக்கம் அழியுங்கள் என கூட்டத்தில் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த ஆட்சியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தில் பேருந்து வசதி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பதை கட்டுப்படுத்த விழிப்புணர்வுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்த போது, அம் மாணவன் ஏற்கனவே விழிப்புடன் இருப்பதால்தான் இது மாதிரியான கேள்விகளை நம் முன் வைப்பதாகவும் அங்கு அதனை செய்யும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்பி மற்றும் ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மேலும் பெண் ஒருவர் கூறுகையில் , போக்குவரத்து வசதி குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது லாரியில் செல்ல அறிவுறுத்தினார் ஆண்களே செல்ல அச்சப்படும் நிலையில் பெண்கள் நாங்கள் அவ்வாகனத்தில் எவ்வாறு செல்வது எனவே இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி மிக மிக முக்கியம் என தெரிவித்தார்.

தொடர்ச்சியாக புகார்கள் தெரிவித்ததும் அதற்கு மாவட்ட ஆட்சியர்,எஸ்.பி நின்ற காட்சி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

Updated On: 3 April 2023 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்