/* */

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது

காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே கஞ்சா போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது
X

போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிய இரு இளைஞர்களை காவல்துறை கைது செய்தது.

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர். இவர் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள செங்கழு நீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்பொழுது தவறான வழியில் ஆட்டோவில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி கேட்டு உள்ளார். காஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் போக்குவரத்து காவலர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, திடீரென சேகரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதில் நிலை குலைந்த நிலையில், கைகளில் காயம் அடைந்தவரை போக்குவரத்து காவலர் சேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சாதிக் , தீபக் என்ற இரு இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர்.


Updated On: 3 Aug 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...