/* */

எடப்பாடி பழனிச்சாமி போல் இடம் மாற்றிப் பேசுபவன் திமுககாரன் அல்ல - உதயநிதி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சிபுரம் தேரடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிச்சாமி போல் இடம் மாற்றிப் பேசுபவன் திமுககாரன் அல்ல - உதயநிதி
X

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்தை ஆதரித்து வாக்குகள் சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

எடப்பாடி பழனிச்சாமி போல் இடத்திற்கு ஏற்றார் போல் பேசும் பழக்கம் திமுகவிற்கு இல்லை எனவும் நாங்கள் பச்சோந்தி அல்ல எனவும் பழனிச்சாமிக்கு காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடியளித்தார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு ஆதரவாக தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் திறந்தவெளி வேனில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.


மேலும் எடப்பாடி பழனிச்சாமி தன்னை செல்ல நிமிடங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக பேசுவதாகவும் அதனை மாற்றும்படி கூறினார். அதற்கு காஞ்சியில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், திமுக வை சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மாதிரி நிலையை கொண்டவர்கள் எனவும் பச்சோந்திகள் அல்ல எனவும் எடப்பாடி பழனிச்சாமி போல் ஆளுக்கு ஏற்றார் போல் இடம் மாற்றம் செய்யும் நிலை தங்களுக்கு இல்லை எனவும், திமுக மாநில உரிமை நீட் தேர்வு விலக்கு , எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அன்றிலிருந்து இன்று வரை கோரப்பட்டு வரும் வாக்குறுதிகளும் கோரிக்கைகளும் ஆகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு முன்பு பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து பாசிச ஆட்சியை வீழ்த்துவோம் என அங்குள்ள குறிப்பேட்டில் எழுதினார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர் அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 25 March 2024 2:00 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  6. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  7. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  8. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  9. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  10. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!