/* */

காஞ்சிபுரம் : போக்குவரத்து நெரிசலை குறைக்க எஸ்.பி சுதாகர் கள ஆய்வு

காஞ்சிபுரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கள ஆய்வுகளில் போலீஸ் எஸ்.பி சுதாகரன் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : போக்குவரத்து நெரிசலை குறைக்க எஸ்.பி சுதாகர் கள ஆய்வு
X

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக திட்டம் தயாரிக்க போலீஸ் எஸ் பி. சுதாகரன் கள ஆய்வு மேற்கொண்டார்.

கோயில் நகரம் , பட்டு நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் திருவிழா , திருமண நாட்களில் காஞ்சிபுரம் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை சீர்படுத்த காவல்துறை பல ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் வாகன ஓட்டிகளின் ஒத்துழையாமை மற்றும் கடை உரிமையாளர்களின் அலட்சியம் உள்ளிட்டவைகளால் இதை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடுதல் போக்குவரத்து ஆய்வாளர்கள் , காவலர்கள் , ரோந்து வாகன பணிகளின் போதும் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை நீக்க புதிய வழிதட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட ஐயங்கள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் இன்று மாலை கள ஆய்வு மேற்கொண்டார்.

மூங்கில் மண்டபம் , இரட்டை மண்டபம் , தேரடி உள்ளிட்ட இடங்களில் DSP முருகன் மற்றும் நகர் காவல்‌ ஆய்வாளர்களுடன் நேரடி ஆய்வு கொண்டார். காஞ்சிபுரம் நகரில் விரைவில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் எனத் தெரியவருகிறது.

Updated On: 18 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...