/* */

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு
X

காஞ்சிபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் பல வருடங்களாக தீர்த்து வைக்கப்படாமல் உள்ள சொத்து பிரச்சனை வழக்குகள், விபத்து காப்பீடு பிரச்சனைகள், குடும்ப உறவுகள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டது.

இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்காடி களுக்கு உள்ளேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வுகள் நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

அதன்படி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பிரச்சினைகளும், விபத்து காப்பீடு பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றங்களில் தீர்வு ஏற்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளங்கோவன், திருஞானசம்பந்தம், ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், செந்தில்குமார், சரவணகுமார், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கார்த்திகேயன், ஜான், பார்த்தசாரதி, மற்றும் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும், காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...