/* */

2 வருடங்களாக உடலில் இருந்த இரும்பு துண்டு அகற்றம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாதனை

கூலித்தொழிலாளியின் உடலில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்த 10செமீ இரும்பு துண்டை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்.

HIGHLIGHTS

2 வருடங்களாக உடலில் இருந்த இரும்பு துண்டு அகற்றம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாதனை
X

கூலித்தொழிலாளியின் உடலில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்த 10செமீ இரும்பு துண்டுஅறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் மற்றும் புற நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு தலைமை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொதுமக்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூலி தொழிலாளி விபத்தில் சிக்கியபோது தொடைப்பகுதியில் சுமார் பத்து சென்டிமீட்டர் அளவுள்ள இரும்புத் துண்டு ஒன்று சிக்கியிருந்தது. இவருக்கு அதிக அளவில் தொடர் வலி இருந்ததைக் கண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை எலும்பியல் பிரிவில் சிகிச்சைக்கு வந்தார்.

அவரை முழுவதுமாக பரிசோதித்த எலும்பில் மருத்துவ நிபுணர்கள் அவரது தொடை பகுதியில் இருந்த இரும்புத்துண்டு குறித்து அவருக்கு தெரிவித்து அறுவை சிகிச்சை மூலம் மிக நேர்த்தியாக அகற்றியுள்ளனர். இதுபோன்ற நேர்த்தியான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On: 29 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு