/* */

பள்ளி சிறுவனுக்கு பாலியல் சீண்டல் தாளாளர் மீது வழக்கு பதிவு

உத்திரமேரூர் அருகே இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

HIGHLIGHTS

பள்ளி சிறுவனுக்கு பாலியல் சீண்டல் தாளாளர் மீது வழக்கு பதிவு
X

உத்திரமேரூர் அருகே இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பெருநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஜுப்ளி CBSE அகாடமி. இங்கு 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த ஃபாதர் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரிடம் சகாயராஜ் தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களது பெற்றோர்கள் அவனது செயலில் மாற்றம் கண்டு இதுகுறித்து கேட்டபோது தாளாளர் சகாயராஜ் தன்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்து துன்புறுத்தி வருகிறார் என தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் சைல்ட் லைப் லைன் மூலம் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெருநகர் காவல் துறையினர் இது தொடர்பாக புகாரிணை பெற்று அது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போக்சோ வழக்கு உள்ளிட்ட 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தற்போது வரை பள்ளி தாளாளர் சகாயராஜ் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவனிடம் சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் சீண்டல் அளித்து அவனை துன்புறுத்தி வந்த தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இத்தண்டனைகள் இனிவரும் காலங்களில் இது போன்ற நபர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 14 Feb 2024 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு