/* */

விடுமுறை நாளில் பட்டுப் புடவை வாங்க குவிந்த மக்கள்

பக்ரீத் விடுமுறை தினமான இன்று காஞ்சிபுரத்தில் குடும்ப நிகழ்வுகளுக்கு பட்டுப்புடவை வாங்க ஏராளமானோர் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து குவிந்தனர்

HIGHLIGHTS

விடுமுறை நாளில் பட்டுப் புடவை வாங்க குவிந்த மக்கள்
X

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பட்டு கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களில் பட்டுப் புடவைகள் வாங்க குவிந்த கூட்டம்

பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளாகவும், வளர்பிறை சுபமுகூர்த்த நாளாகவும் இருந்ததால் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் நகரின் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பட்டு நகரம்,கோயில்களின் நகரம் என்ற பெருமைக்குரியது காஞ்சிபுரம். இங்கு நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலையில் பிரபலமான பட்டு புடவை கடைகள் உள்ளன.

இதே போல காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத்தெரு, செங்கழு நீரோடை வீதி, சின்னக்காஞ்சிபுரம் அரசமரத்தெரு, சங்கூசா பேட்டை நடுத்தெரு ஆகிய பகுதிகளில் உற்பத்தி விலைக்கே பட்டுச்சேலைகளை விற்பனை செய்யும் ஜவுளிக்கடைகளும் உள்ளன.

வளர்பிறை சுப முகூர்த்த நாளாகவும், பக்ரீத் பண்டிகை விடுமுறை தினமாகவும் இருந்ததால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திருமணப் பட்டு மற்றும் நிச்சயாதார்த்த பட்டுச் சேலைகள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

திருமணப் பட்டு வாங்க வந்த பொதுமக்கள் அதிகமான உறவினர்களுடனும் வந்து பட்டுச் சேலைகளை தேர்வு செய்ததால் பட்டு ஜவுளி விற்பனைக் கடைகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. முகூர்த்த நேரத்தில் திருமணப் பட்டுச் சேலை வாங்க வேண்டும் என்று சில கடைகளில் பட்டுச் சேலைகள் வாங்க வந்த பொதுமக்கள் காத்திருந்து பட்டுச் சேலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில ஜவுளி நிறுவனங்கள் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. பட்டுச்சேலைகள் விற்பனைக் கடைகளுக்கு முன்பாக வெளியூர்களிலிருந்து வந்த ஏராளமான கார்கள், வேன்களும் அணிவகுத்து நின்றதால் காமராஜர்சாலை, நெல்லுக்காரச் சந்தி ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

வழக்கம்போல அவரவர் பணிகளுக்கு செல்லும் உள்ளூர் மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதையும் காண முடிந்தது. அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல் துறையினர் சரி செய்து வந்தனர்

Updated On: 29 Jun 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...