/* */

சாலையில் குப்பையை வீசினால் அபராதம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அறிவிப்பு

சாலையில் குப்பையை வீசும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சாலையில் குப்பையை வீசினால் அபராதம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அறிவிப்பு
X

பைல் படம்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஒன்றாக உள்ளது. கோயில் நகரம் பட்டு நகரம் மற்றும் தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அம்மா நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகரப்பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 டன் குப்பை சேகரமாகிறது.

இதில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளதாக தெரிகிறது. குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது.

மாநகராட்சி உள்ள குப்பைகளை சேகரிக்க நாள்தோறும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான பணிபுரிந்து வரும் நிலையில் இவர்கள் சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு என இரு வேலைகளில் பணிகள் மேற்கொண்டு தூய்மை உருவாக்கும் நோக்கில் மேயர் ஆலோசனையுடனா இணைந்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில் பெரும் வளர்ச்சி கொண்டு வரும் நிலையில், வணிக வளாகங்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

முதல் கட்டமாக குடியிருப்பு பகுதிகளில் அருகில் உள்ள குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு, அங்கு மா கோலமிட்டு , வீடுகள் தோறும் பணியாளர்கள் நேரில் சென்று தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

மேலும் வணிக வளாகங்களில் சேரும் குப்பைகளை சாலையில் வீசி வருவதை தடுக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை முதல் வணிக வளாகங்களில் நுழைவு வாயில் அருகே குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வைத்திருக்க வேண்டும் எனவும் , தூய்மை பணியாளர்கள் நேரில் சென்று அவற்றை பெற்றுக் கொள்வார்கள் எனவும், இதை மீறும் வணிக வளாகங்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் அபராதம் விதிக்கப்படும் என அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வழிகாட்டு முறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாலைகளில் குப்பைகள் வீசூம் நடவடிக்கை குறைத்துக் கொண்டு வணிக வளாகங்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தந்து சிறந்த ஒரு மாநகராட்சியாக காஞ்சிபுரம் நீடித்த உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பல்வேறு சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாநகராட்சி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் நிலையில் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து சிறந்த சுற்றுலா தளமாக காஞ்சிபுரம் விளங்க ''எனது குப்பை, எனது பொறுப்பு'' என உறுதிமொழி முழக்கத்துடன் செயல்படுவோம்.

Updated On: 8 Oct 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...