/* */

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி. திறந்து வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை போலீஸ் எஸ்.பி. சுதாகரன் திறந்துவைத்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி. திறந்து வைத்தார்
X

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனையில் புதிய புறக்காவல் நிலையத்தை போலீஸ் எஸ்பி சுதாகர் திறந்து வைத்தார்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.

இங்கு ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர மருத்துவ உதவிக்கு இங்கு வந்து உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் இங்கு பணிபுரிவதால் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை விபத்து ஏற்பட்டால் அவசர சிகிச்சை அளிக்க சிறப்பு விபத்து பிரிவு செயல்பட்டு வருகிறது

மேலும் இங்குள்ள நோயாளிகள் திடீரென இருந்தால் அது குறித்த சர்ச்சை எழுவதால் மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தெரிவித்தால் மட்டுமே காவல்துறை அங்கு வரும் சூழ்நிலை உருவாகியது.

இதனைப் போக்க அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது

இன்று அதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் திறந்து வைத்தார்.

இந்தப் புறக்காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார் எனவும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் அச்சமின்றி நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறலாம் எனவும் தெரிவித்தார்.


Updated On: 12 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...