/* */

மாநகராட்சியுடன் இணைப்பால் நூறுநாள் வேலைவாய்ப்பை இழக்கும் கிராமங்கள்

காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் விரிவாக்க கிராமங்கள் இனிவருங்காலங்களில் 100 நாள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

மாநகராட்சியுடன் இணைப்பால் நூறுநாள் வேலைவாய்ப்பை இழக்கும் கிராமங்கள்
X

 மானம்பதி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர்.( கோப்பு படம் ) 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் உடலுழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் பெருநகராட்சியிலிருந்து தங்களை கிராம ஊராட்சிக்கு மாற்ற கோரி சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தரிடம் மனு அளித்த அஞ்சூர் கிராம மக்கள்.( கோப்பு படம் )

கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சி தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சில கிராமங்களை இணைக்கும் சூழ்நிலை உள்ளது.

இதில் 11கிராமங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் நகராட்சி பெருநகராட்சி ஆக மாறும் போது ஓரிக்கை, தேனம்பாக்கம் மற்றும் செவிலிமேடு பேரூராட்சிகள் இணைக்கப்பட்டது.

இதில் தேனம்பாக்கம் பஞ்சாயத்துககு உட்பட்ட அஞ்சூர் கிராம மக்கள் தங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க பெருநகராட்சியிலிருந்து தங்கள் ஊராட்சியை விடுவிக்க வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மாநகராட்சியாக மாறியுள்ளதால் 11 கிராமங்களை சேர்ந்த சுமார் 1500 நபர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் நூறு நாட்கள் வேலை வாய்ப்பு பொருந்தாது .

இவர்களுக்கு 100 நாள் பணிகள் மூலம் சில ஆயிரங்கள் வாழ்வாதாரத்திற்கு கிடைத்த நிலையில் இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அரசு உள்ளது.

Updated On: 26 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.