/* */

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க செல்வம் எம்.பி கோரிக்கை

ரயில்வே தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் பேசினார்.

HIGHLIGHTS

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க செல்வம் எம்.பி  கோரிக்கை
X

சென்னை தென்னக இரயில்வே தலைமையகத்தில் நடைப்பெற்ற கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டம். 

சென்னை தென்னக இரயில்வே தலைமையகத்தில் நடைப்பெற்ற கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தார். அதில் , தமிழ்நாட்டிற்கு துரித இருப்புப்பாதை போக்குவரத்து (MRTS) திட்டத்தை வலியுறுத்தியதோடு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

1) மகளிருக்கு சிறப்பு இரயில் மற்றும் கூடுதல் இரயில் பெட்டிகள்

2) இரயில் நிலையங்களில் மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்தங்கள்.

3) இரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

4) பயணியர் சுகாதாரமான ஓய்வு அறை

5) கால்நடைகள் விபத்துக்களை தடுப்பதற்காக சுரங்கப்பாதைகள்

6) இரயில் நிலையங்களில் மேற்கூரைகள்

7) கூடுதல் இருப்புபாதைகள்

8) சரக்கு கிடங்குகள்

9) காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம் இரயில் நிலையங்களில் விரைவு இரயில்கள் நிறுத்தம்

10) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள இரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்க வலியுறுத்தல்

11) செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் தானியங்கி நடைமேடை (Escalator)

12) மேல்மருவத்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக புதிய இரயில் இயக்க வலியுறுத்தல்.

13) காஞ்சிபுரத்தில் இருந்து கிண்டிக்கு சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் , பூந்தமல்லி, போரூர் வழியில் அரசு & தனியார் பணியாளர்களுக்காக புதிய இருப்பு பாதை அமைக்க வலியுறுத்தல்

14) ஸ்ரீபெரும்புதூர் , ஒரகடம், சிங்கபெருமாள்கோவில் வழியாக மாமல்லபுரம் வரை புதிய இருப்புபாதை அமைக்க வலியுறுத்தல்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார். இக்கோரிக்கைகள், விரைவில் பரிசீலிக்கப்படும் என, இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 16 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  7. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  10. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!