/* */

மோசடியாக வங்கியிலிருந்து பணம் எடுப்பு : காஞ்சிபுரம் சைபர்கிரைம் தனிபோன்

வங்கி கணக்கில் மோசடியாக பணம் எடுக்கபட்டிருந்தால் காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல் எண்ணில் அழைக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

மோசடியாக வங்கியிலிருந்து பணம்  எடுப்பு : காஞ்சிபுரம் சைபர்கிரைம்  தனிபோன்
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகம்.

பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு குறிப்பாக கிராமப்புற பொதுமக்கள், ஓய்வுபெற்றவர்களை அடையாளம் காணாத நபர் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு வந்த ஓடிபி நம்பர் கூறுமாறு கேட்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது..

இதை தவிர்க்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப் பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடையாமல் கீழ்கண்ட எண்ணான📞155260 அழைத்து புகார் தெரிவித்தால் மோசடி நபர்கள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காத வகையில் ஃப்ரீஸ் செய்து கொடுக்கப்படும் எனவும், இது 24 மணி நேரத்துக்குள் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக நேரில் வராமல் www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு