திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
X

முத்துமாரியம்மன்கோவில் தேர் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்.

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு 72 ஆவது ஆண்டு சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி முத்து மாரியம்மன் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் முளைப்பாரியுடன் வீதி உலா வந்து பூச்செரரிதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து உற்சவ அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, செங்குளம் காலனி, என்எம்கே காலனி வழியாக வீதியுலா வந்து கோயிலை அடைந்தது.

தொடர்ந்து சனிக்கிழமை காலை காவிரியாற்றிலிருந்து பால்குடம், காவடிகள் மற்றும் அக்னி சட்டிகள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். அம்மனுக்கு கஞ்சிவார்த்தல் மற்றும் அன்னதானமும் மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை சங்கிலி ஆண்டவருக்கு சுத்த பூஜையும்,பகலில் மெகா அன்னதானமும், மாலை மாவிளக்கு பூஜையும், திங்கட்கிழமை கிடாவெட்டு பூஜையை தொடர்ந்து மாலை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை உலகநாதபுரம் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச்சங்கத்தினர் செய்துள்ளனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?