/* */

காஞ்சிபுரம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாநகரின் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளி கைது
X

தலை மறைவு குற்றவாளி விக்கி ( கை உடைந்திரும்பவர்) , அவருடன் இருந்த மணிகண்டன் (வலது மேல்), வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாநகரின் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவந்த முக்கிய குற்றவாளி தற்போது தடுக்கி விழுந்து கையில் மாவுகட்டு போடப்பட்டு உடனிருந்த கஞ்சா சப்ளையர்ஸ் இருவர் கைது சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடி எளிதாக கிடைக்கும் பொருளாக மாறி இருந்து வந்தது. இந்த நிலையில் இதனை கட்டுபட்டுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இதற்கென தனிப்படை அமைத்து தற்போது தீவிரமாக மாவட்ட முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட‌ மாண்டூகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் சிலர் வாடிக்கை எடுத்து தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்வதாக அந்த தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவ்வீட்டிற்கு சென்றுவந்த காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவந்த சிவசங்கரன்‌ என்பவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவ்வீட்டில் சிலர் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில், தீடிரென போலீசார் அவ்வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததும், தயாரிக்க பயன்படுத்தி ஆணி, பால்ஸ் போன்ற மூலப்பொருட்களும் கத்தி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது தெரியவந்தது.

இதனையெடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இதில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி, அவனது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த ஜெயகுமார்,சோமேஸ்,லோகேஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தனது எதிரியாக இருந்துவந்த ஆர்.கே என்பவரை கொல்ல சதிதிட்டம் தீட்டிய அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விக்கி(எ) பரிவட்டம் விக்கி தலைமறைவாக இருந்துவந்த நிலையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தாயார்குளம் அருகே கஞ்சா விற்பனையாளர்கள் மணிகண்டன், வசந்த்குமார் ஆகியோருடன் விக்கி உள்ளதாக தகவல் வந்த நிலையில் போலீசார் இருவரையும் பிடித்துவிட விக்கி தப்பியோடிய போது தவறி விழுந்து நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார்.

இதனையெடுத்து அவனுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டுப்பட்டு இன்னும் சற்றும் நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரும் சிறையில் அடைக்கபட்டனர்.

இவ்வுலகில் முக்கிய குற்றவாளி விக்கி கைது செய்யப்பட்டுள்ளது இவ்வழக்கு நிறைவு பெற்றுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!