/* */

காஞ்சிபுரத்தில் பணி தள பொறுப்பாளர் மாற்றம்: 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் கருப்படிதட்டிடை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்களை மாற்றியதைக் கண்டித்து நூறு நாள் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பணி தள பொறுப்பாளர் மாற்றம்: 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்
X

காஞ்சிபுரம் கருப்படிதட்டிடை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்களை மாற்றியதைக் கண்டித்து நூறு நாள் பணியாளர்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்

காஞ்சிபுரம் அடுத்த கருப்படிதட்டிடை ஊராட்சியில் 450 க்கும் மேற்பட்ட நூறு நாள் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த பணி தள பொறுப்பாளர்களான மகேஸ்வரி மற்றும் சித்ரா ஆகியோரை மாற்றி புதியதாக மங்கையர்கரசி, நிர்மலா ஆகிய இருவரை நியமித்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே இருந்த இருவருக்கும் 100நாள் முடியாத நிலையில் இவர்களை நியமித்ததை எதிர்த்து நூறு நாள் பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காஞ்சிபுரம் காஞ்சி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து வட்டார வள அலுவலருடன் இணைந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டு கோரிக்கை குறித்து பரீசீலிப்பதாக கூறியதன் பேரில் சமாதானம் கொண்டு சாலை மறியலை கலைத்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த வட்டார வள அலுவலர்கள் பவானி மற்றம் ரேவதி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பணியாளர்கள் கூறும் நான்கு நபர்களில் இருவரை நியமனம் செய்தாக வாக்குறுதி அளித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...