/* */

காஞ்சிபுரம்: கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்தும் மக்கள்!

ஏழு தினங்களுக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் துவக்கப்பட்டதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் பெற்று மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் பெற்று  தடுப்பூசி செலுத்தும் மக்கள்!
X

காஞ்சிபுரத்தில் ஒரு வாரத்திற்கு பிறக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்கள்.

தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலைத் தடுக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரத்தில் தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தடுப்பூசி வந்தவுடன் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மத்திய தொகுப்பிலிருந்து தடுப்பூசி அளிக்கப்பட்டு சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்தபின் இன்று காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் 4 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

நான்கு இடங்களில் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 600 நபர்களுக்கு செலுத்த திட்டமிட்டு டோக்கன் முறையில் அளித்து கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி பூக்கடை சத்திரம் அருகே அமைந்துள்ள உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமர்ந்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இதேபோல் காலண்டர் தெருவில் அமைந்துள்ள தனியார் கருணை இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளி நபர்களுக்கும் என்று சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாளை முதல் கூடுதலாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் 18 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Updated On: 12 Jun 2021 10:16 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...