/* */

வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ கச்சபேஸ்வரர்...!

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கச்சிபேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 16ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த  ஸ்ரீ கச்சபேஸ்வரர்...!
X

வெள்ளித்  தேர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

காஞ்சி ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் வெள்ளித்தேரில் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சேபேஸ்வரர் வீதி உலா வந்தார்.30 நிமிட தொடர் கண் கவர் வாணவேடிக்கை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திருத்தலங்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. அதில் தலை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்வு காணும் பரிகாரம் தலமாக விளங்கும் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலின் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் ஸ்ரீகச்சபேஸ்வரர் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.


அவ்வகையில் இன்று பத்தாம் நாள் இரவு உற்சவத்தில் ஸ்ரீ சுந்தராம்பிகை , ஸ்ரீ கச்சபேஸ்வரர் வெள்ளித்தேரில் ராஜகோபுரம் அருகே சிவ, கைலாய வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து 30 நிமிட வாண வேடிக்கை நிகழ்வு தொடங்கி தொடர்ச்சியாக பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் வான வேடிக்கை நடைபெற்றது.

இதனைக் காண காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து வெள்ளித்தேர் மற்றும் வானவேடிக்கை கண்டு ரசித்தனர்.

Updated On: 25 April 2024 4:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...