/* */

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை காலத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கருதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே பொதுமக்கள் நலன் கருதி அமைக்கப்பட்ட மாபெரும் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி சோமசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் திறந்து வைத்த போது

தமிழக முழுவதும் கடந்த 15 தினங்களாக கடும் வெயில் அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது.

நேற்று பல்வேறு மாவட்டங்களில் 105 டிகிரி தாண்டி கடும் வெப்பம் நிலவி பொதுமக்களுக்கு பெரும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தியது.

இந்த வெப்ப தனலை காத்துக்கொள்ள பொதுமக்கள் அதிகளவில் நீர் பழ ரசங்கள் அருந்த வேண்டும் என மருத்துவத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் தமிழக முழுவதும் பொது மக்களின் நல்ல கருவி தண்ணீர் பந்தல்கள் பல்வேறு பிரிவுகளின் சார்பில் திறக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாபெரும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் உடல் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி, வெள்ளரிப்பழம், கமலா , ஆரஞ்சு மாம்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள், நுங்கு இளநீர், மோர், ரோஸ் மில்க் மற்றும் கூழ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்க்கையில் கோயம்பேடு பல மார்க்கெட் காஞ்சிபுரத்துக்கு வந்ததா என வியக்கும் வண்ணம் அப்பகுதியில் கடந்து சென்றவர்கள் பார்த்து சென்றனர்.

இந்த மாபெரும் தண்ணீர் பந்தலை உன்னால் அமைச்சர்கள் வளர்மதி, சோமசுந்தரம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர்கள் பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பழங்கள் பழ ரசங்களை வழங்கினர்.

பொதுமக்கள் பெற்று செல்லும் வகையில் வரிசையில் செல்ல பாதை உருவாக்கபட்ட நிலையில், வழக்கம்போல் முந்தி சென்று அனைத்து பழங்களையும் சூறையாடி சென்று அனைவருக்கும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூக்கடை சத்திரம் பகுதியில் பகுதி கழக செயலாளர் பாலாஜி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக பழங்கள் வழங்கப்பட்டது.

இதே போல் ஒரே நாளில் இன்று காஞ்சிபுரத்தில் ஐந்து இடங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

Updated On: 2 May 2024 1:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்