/* */

காஞ்சிபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் முறைகேடாக வெற்றி: கவுன்சிலர் மீது புகார்

காஞ்சிபுரம் 27வது வார்டில் வெற்றிபெற்ற ஷாலினி ஜாதி சான்றிதழ் பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக வேட்பாளர் புகார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் போலி சான்றிதழ் மூலம் முறைகேடாக வெற்றி: கவுன்சிலர் மீது புகார்
X

காஞ்சிபுரம் 27வது வார்டில் வெற்றிபெற்ற ஷாலினி ஜாதி சான்றிதழ் பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக வேட்பாளர் புகார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட விரும்பியவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது பதவி ஏற்றுள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 27 இல் திமுக சார்பில் விஜயகுமாரியும், தென்னை மர சின்னத்தில் ஷாலினி உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். இதில் 392 வாக்கு வித்தியாசத்தில் ஷாலினி வெற்றி பெற்று தற்போது மாநகராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் இருபத்தி ஏழாவது வார்டு பகுதி பட்டியலியின பெண்களுக்கானவர்கள் மட்டுமே போட்டியிட இயலும்.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த விஜயகுமாரி மேற்படி வெற்றி பெற்ற வேட்பாளர், ஷாலினி வன்னியர் இன வகுப்பை சேர்ந்தவர் என்பது பள்ளி சான்றிதழில் உள்ளதாகவும், வேட்பு மனு தாக்கலின் போது அரசிடம் பெற்ற சான்றிதழில் ஆதிதிராவிடர் என குறிப்பிட்டுள்ளார். இதை இவர் முறைகேடாக பெற்றுள்ளதாகவும், இதனை தேர்தலில் சமர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளதால் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக முதல்வர் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக இன்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற முறை கேட்டால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு வழங்கும் பிரதிநிதித்துவம் பறிக்கக்கப்பட்டுள்ளதாகவும் இவர் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கேட்டு உள்ளார். நாளை இது தொடர்பாக வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.

Updated On: 10 March 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!