/* */

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்ய இந்து முன்னணி சார்பில் புகார்

பூஜை பொருட்கள் விற்கும் கடைகாரர் இந்து கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்ய இந்து முன்னணி புகார்

HIGHLIGHTS

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்ய இந்து முன்னணி சார்பில் புகார்
X

சம்பவம் நடைபெற்ற சங்குபாணி விநாயகர் ஆலயம் 

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது சங்குபாணி விநாயகர் திருக்கோயில். இக்கோயில் முன்பு இந்து முன்னணியினர் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழக அரசு கொண்டாட அனுமதிக்க வேண்டும் எனக்கோரி விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விநாயகர் கோயில் அருகே தேங்காய் பழம் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பூபதி என்பவர் கடை முன்பு இருந்த ஆணியில் செருப்பை மாட்டி வைத்து அதில் அத்தி வரதர் புகைப்படத்தை சொருகி சிறிய பூமாலை போட்டு வைத்துள்ளார்.

இதனை கண்ட இந்து முன்னணியினர் ஆத்திரம் அடைந்து கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு கடைக்காரரை இந்து முன்னியினர் கடையை தாக்க முயற்சித்தனர். கடையில் இருந்த பூஜை சாமான்கள் அனைத்தும் தூக்கி வீசி, கடைகளை மூடக்கோரி கோஷமிட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை உடனடியாக அப்பகுதிக்கு வந்து இந்து முன்னணியை சமாதானப்படுத்தி பூபதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பூபதி நடத்திவரும் கடை அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவும் அதை உடனடியாக பெருநகராட்சி அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பூபதி கடந்த சில மாதங்களாகவே மனநிலை சரியில்லாத நிலையில் இருந்துள்ளார். இவரது மனைவி மற்றும் கடைக்கு பூஜை பொருள் வாங்க வருவோரிடம் பூபதி சண்டையிடுவது வாடிக்கையாக இருந்து வந்ததார் என்றும் தெரியவந்துள்ளது.

Updated On: 2 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...