/* */

ஊரடங்கு விதிகளை மீறினால் அரசு வேலை கிடைக்காது: எஸ்.பி எச்சரிக்கை

ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டால் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்காது என காஞ்சிபுரம் எஸ் .பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஊரடங்கு விதிகளை மீறினால் அரசு வேலை கிடைக்காது: எஸ்.பி எச்சரிக்கை
X

ஒமிக்ரான் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 1100 பேர் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..

காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம்வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோய்தொற்று விழிப்புணர்வு அவசியத்தை வலியுறுத்தினர்.

முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வீதிகளில் சுற்றிய சுமார் 481 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் விதிகளை மீறி செயல்பட்டால் IPC 188,269,270 ஆகியவை கீழ் வழக்கு பதியபட்டால் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட், அரசு வேலை, லைசன்ஸ் ஆகியவற்றிக்கு வெரிபிகேஷனில் சிக்கல் ஏற்படும்.

ஆகவே நேரம் போகவில்லை, பொழுது போகவில்லை என வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என இளைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அறிவுரையும், அதே சமயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 9 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...