/* */

இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் கோரிக்கை

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மறுத்த இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் கோரிக்கை
X
இறந்த வசந்தா உடலுடன் இருளர் இன மக்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் நேரு இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றிய அளித்த பின் அது குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டார்.

அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர் மக்களுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைத்து வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள் இருளர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் நடத்தியதில் மாவட்டம் முழுவதும் வீட்டுமனை பட்டா 6000 குடும்பங்களுக்கு மேல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.பட்டா வழங்கப்பட்ட இடங்களை அளந்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள் உடன் குடியிருப்புகள் 6 இடங்களில் சுமார் 445 வீடுகள் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் கட்டி கொடுக்கப்பட்டு தமிழக முதல்வர் அவர்கள் திறப்பு விழா நடத்தி மக்கள் வீடுகளில் குடியேறி உள்ளார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டுகுளம் 58 வீடுகள், சிங்காடி வாக்கம் 100 வீடுகள், ஊத்துக்காடு 78 வீடுகள். மலையாங்குளம் 178 வீடுகள். கட்டராம்பாக்கம் 31 வீடுகள் இம்மக்கள் வசித்து வருகிறார்கள்.இந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டியுள்ளது.

இம்மக்களுக்கு சுடுகாடு பிரச்சனையை தீர்க்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காஞ்சிபுரம் வட்டம் விப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுகுளம் கிராமத்தில் பழங்குடி இருளர் மக்கள் 58 குடும்பங்கள் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்கள். வசந்தா க/பெ சுப்பிரமணி (65 வயது) இவர் 25.04.2024 அன்று இறந்துவிட்டார். இவரை அடக்கம் செய்ய விப்பேடு ஊராட்சியிலும், பக்கத்தில் உள்ள திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களால் மறுப்பு தெரிவித்தும். உடல் அடக்கம் செய்ய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். காரணம் இறந்த நபர் இருளர் இன மக்கள் என்பதால் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீதும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழக்கு பதிவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி 25.04.2024 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் நேரு, மலைவாழ்மக்கள் சங்கம் மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட பொருளாளர் சீனுவாசன் நேரடியாக பகுதிக்கு சென்று இறந்த வசந்தாவின் உடலை அடக்கம் செய்திட காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காஞ்சிபுரம் வட்டாட்சியரி டம் தொடர்பு கொண்டு பேசியும். பிறகு காஞ்சிபுரம் தாசில்தார் ஆலோனைப்படி காஞ்சிபுரம் தாயார்குளம் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழங்குடி இருளர் மக்கள் வசிக்கும் அரசு வழங்கிய குடியிருப்பு பகுதியில், குண்டுகுளம், சிட்டியாம்பாக்கம், ஊத்துக்காடு, மலையாங்குளம், கட்டராம்பாக்கம் பகுதியில் சுடுகாடு அமைத்து கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 26 April 2024 11:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  3. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  7. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்