/* */

சாக்பீஸ் ஓவியத்தில் ஏகாம்பரநாத பிரமோற்ச விழா காட்சிகள்: அசத்தும் சகோதரர்கள்

காஞ்சிபுரம் ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிலவ வருட பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

சாக்பீஸ் ஓவியத்தில் ஏகாம்பரநாத பிரமோற்ச விழா காட்சிகள்: அசத்தும் சகோதரர்கள்
X

பிரமோற்சவ விழா குறித்த சாக்பீஸ் ஓவியங்கள்.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிலவ வருட பங்குனி உத்திர பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த பிரமோற்சவிழா குறித்து காஞ்சிபுரம் நகரை சேர்ந்த தினேஷ், டில்லி பாபு சகோதரர்கள் இருவர் தங்கள் ஓவிய திறமையினை விழா குறித்த தகவல்களை வரைந்து கோயில் உள் பிரகார நுழைவு வாயில் வைத்துள்ளனர். இதை காணும் பக்தர்கள் மற்றும் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்து இணையதளங்களில் பதிவிடுகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை முன்கூட்டியே பக்தர்கள் அறியும் வண்ணம் ஓவியமாக வைப்பதால் பக்தர்கள்‌ வருகை கூடும் நிலை உள்ளது.

மிக சிறந்த ஆன்மீக பக்தி கொண்ட இச்சகோதர்கள் காஞ்சிபுரத்திலுள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் பெற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்து குறைகளை களைகின்றனர். குறிப்பாக ஏகாம்பரநாதர் திருக்கோயில் சிலை முறைகேட்டை வெளிகொண்டு வந்ததில் இவர்கள் பங்கு சிறப்பானது.

Updated On: 12 March 2022 1:53 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!
  2. சினிமா
    பாரா பாடல் வரிகள் - இந்தியன் 2 (2024)
  3. மாதவரம்
    கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துகள் அப்பா அம்மா..!
  5. நாமக்கல்
    வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்!
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா..!
  7. சென்னை
    என்ன செய்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்?
  8. செங்கல்பட்டு
    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்!
  9. ஈரோடு
    கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற...
  10. மேட்டுப்பாளையம்
    மண் சரிவால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து: சீரமைக்கும் பணிகளில்...