கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!

கங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா!
பெருங்காவூர் ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

சோழவரம் அருகே பெருங்காவூர் ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பெருங்காவூர் ஊராட்சி மதுரா மேட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் 3-ம் ஆண்டு தீமிதி திருவிழா கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கணபதி ஹோமம்,கொடிஏற்றுதல், காப்புகட்டுதல், கரகம் எடுத்தல், ஆலய வளாகத்தில் பெண்கள் வாடைபொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர்,சந்தனம்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ணமலர்களால், திரு ஆவரிடங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல், கும்பப்படையல் பூஜை நடைபெற்றது. இதணைத்தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காப்புகட்டிய பக்தர்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.

இத்திருவிழாவிற்கு பெருங்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுவிட்டிகோபி, துணைத்தலைவர் சுகாசினிசரவணன் மற்றும் ஆலய பொறுப்பாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது. இத் திருவிழாவை காண இந்த ஊராட்சியில் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story