கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம்

கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம்

கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் சாலையில் மாமரத்துப் பள்ளம் பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் மழைநீர் கரைபுரண்டு ஓடியதையும், ஆபத்தை உணராமல் மோட்டார் சைக்கிளை தண்ணீரில் தள்ளிக்கொண்டு சென்றவர்களையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் குன்றி செல்லும் சாலையில் மாமரத்துப் பள்ளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடம்பூர் மலைப்பகுதியில் குன்றி செல்லும் சாலையில் மாமரத்துப் பள்ளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்கள் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் வழியாக செல்ல வேண் டாம். குன்றி வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஒலி பெருக்கி மூலமும், விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைத்தும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், கடம்பூரை அடுத்த நகலூர் கச்சன்பள்ளம் வழியாக தரைமட்ட பாலம் வழியாக மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் சாலையில் உள்ள மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. இதில் ஆபத்தை உணராமல் மோட்டார் சைக்கிளை தண்ணீரில் தள்ளிக் கொண்டு சிலர் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story