/* */

கால்வாய் கழிவை ரோட்டில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் முகம்‌ சுளிப்பு

கைலாசநாதர் திருக்கோயில் செல்லும் வழியில் ஆபத்தை விளைக்கும் வகையில், சாலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மாநகராட்சி மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

கால்வாய் கழிவை ரோட்டில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் முகம்‌ சுளிப்பு
X

சாலையில் இருந்த கால்வாய் கழிவுகளால் கைலாசநாதர் கோயில் சாலை. 

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. கோயில் நகரம் , பட்டு நகரம் என்பதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் வருகை புரிந்து செல்வது வழக்கம். இது மட்டுமல்லாமல் புகழ் பெற்ற திருக்கோயில்களுக்கான வெளிநாட்டு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வருகை புரிவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகளை கையாண்டு வருகிறது. மேலும் கழிவுநீர் தடையின்றி செல்ல, கால்வாய் கழிவுகளை தூர்வாரும் பணியினை துவக்கி உள்ளது. இது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளளது.

இருப்பினும் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் ஊழியர்கள் சாலை ஓரம் கொட்டுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே காஞ்சிபுரத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதால், நேற்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்த காரணத்தால் கழிவுகளில் மழை நீர் அடித்து செல்லப்பட்டு சாலை முழுவதும் கழிவுகளால் போக்குவரத்துக்கு பெரிதும் இடைஞ்சலாக கைலாசநாதர் கோவில் செல்லும் வழியில் காணப்பட்டது.

இதனால் அவ்வழியாக தேர்வுக்கு சென்ற மாணவர்கள் , கைலாசநாதர் கோயிலை காண வந்த சுற்றுலாப் பயணிகள், என பலர் ஆபத்துடனே அப்பகுதியை கடந்தனர். கழிவுகளை கண்ட சுற்றுலா பயணிகள், முகம் சுளித்துக் கொண்டே சென்றனர். மாநகராட்சியின் ஒரு செயலை வரவேற்கும் பொதுமக்கள், அதை கையாளும் ஊழியர்களுக்கு அறிவுரை தந்து, சுற்றுலா நகரம் என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என மாநகராட்சி செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 11 May 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...